ஒளவையாரின் ஆத்திச்சூடி -- 59 / 108
59. தூக்கி வினைசெய்
எந்தக் காரியத்தை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்.
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இல்லாமல் பொறுமையாக தீர ஆரய்ந்து அறிந்து செய்ய வேண்டும்.
செய்யும் தொழிலை நன்மை விளையுமா, தீமை விளையுமா என்று சீர்தூக்கிப் பார்த்து நன்மை விளையும் செயல்களைச் செய்யவேண்டும்.
ஒரு வேலையை முடிப்பதற்கான வழி முறைகளை ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்வது நலம்.
எத பண்ணாலும் plan பண்ணி பண்ணனும். இல்லைனா எங்கயாவது போய் முட்டிக்கும்.
ஒரு வேலையை முடிப்பதற்கான வழிமுறைகளை நன்கு ஆராய்ந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத் தொடங்கவும்.
நாம் ஒரு செயலைச் செய்யத் தொடங்கும் முன்பாக, அந்தச் செயலின் தன்மை, அதை நன்கு செய்ய முடியுமா, அதைச் செய்து முடிக்கக்கூடிய தன்மை நம்மிடம் இருக்கிறதா,
இதனை நன்கு முடிக்க என்னென்ன தேவை, அவைகளை நாம் சேகரிக்க முடியுமா என்பதையெல்லாம் நன்கு ஆலோசித்து முடிவு செய்த பின்னரே தொடங்க வேண்டும்.
எந்தக் காரியத்தையும் தொடங்கிய பிறகு சுணக்கமின்றி அதை முடிப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டுமே தவிர, இடையில் சோர்வு வந்துவிடக் கூடாது.
செய்து முடித்தபின் பலரும் அதனைப் பாராட்டி நம்மைப் பெருமைப் படுத்தும் விதமாக நாம் எந்த செயலையும் செய்து முடிக்க வேண்டும்.
தூக்கி என்பதற்கு நன்கு ஆராய்ந்து எனப் பொருள் கொள்ள வேண்டும்.