Monday, November 4, 2024

ஒளவையாரின் ஆத்திச்சூடி -- 81 / 108

 ஒளவையாரின் ஆத்திச்சூடி -- 81  / 108



81. பூமி திருத்தி உண்


நிலத்தைப் பண்படுத்தி, அதில் பயிர் செய்து, விளைந்த நெல்லைக் கொண்டு உண்ண வேண்டும்.


அடுத்தவர் வாழ்வை வாழாதே. நீயே உழைத்து வாழ். உன் சொந்த காலில் நில். 


கால் வயிற்றுக் கஞ்சியானாலும் நீயே உழைத்துக் குடி. அடுத்தவரிடம் கையேந்தாதே!


விளைநிலத்தை உழுது அதில் பயிர் செய்து உண். (அ) விவசாயத்தை வாழ்க்கை தொழிலாகக் கொள்.


நாம் விவசாயம் செய்யும் நிலம் நிலையானது, அந்த நிலத்தை அப்படியே வைத்துக் கொண்டு அதில் பயிர் செய்து விவசாயம் செய்து கொண்டிராமல், 


அவ்வப்போது அந்த நிலத்தை நன்கு உழுது, உரமிட்டு பாதுகாத்து பயிர் செய்ய வெண்டும். 


மனிதன் தன் உடலை அடிக்கடி நோய் வராமல் பாதுகாத்து வருவது போல நம் நிலத்தையும் நன்கு பாதுகாத்து பயிர்த்தொழில் செய்ய வேண்டும்.


No comments:

Post a Comment

ஒளவையாரின் ஆத்திச்சூடி -- 59 / 108

 ஒளவையாரின் ஆத்திச்சூடி -- 59  / 108 59. தூக்கி வினைசெய் எந்தக் காரியத்தை செய்தாலும் அதை நன்கு ஆராய்ந்து தெளிந்து செய்ய வேண்டும்.  எடுத்தோம...